News May 7, 2024
இ-பாஸ் நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்வோர் கட்டாயம் இ-பாஸ் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சோதனைச் சாவடிகளில் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இ-பாஸ் நடைமுறை இன்று முதல் ஜூன் 30 வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீலகிரி செல்வதற்காக இதுவரை 21,446 வாகனங்களுக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
உடல் எடையை குறைக்க உதவும் ‘பாசிப்பயறு அடை’

◆உடல் எடை குறைப்பு, செரிமானம் & இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்தது.
➥பாசிப்பயிறு & அரிசியை தனித்தனியாக 4- 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
➥ஊறிய பிறகு, அதில், வெங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை & உப்பு சேர்த்து மாவாக அரைத்து கொள்ளவும்.
➥இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய தேவையே கிடையாது. அரைத்ததும் அப்படியே அடை செய்யலாம். SHARE IT.
News August 21, 2025
இன்று விண்வெளி திட்டம் தொடர்பான சிறப்பு விவாதம்

ஜூலை 21 அன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், விண்வெளி திட்டம் தொடர்பாக இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது. விண்வெளி நாயகர் சுபான்ஷு சுக்லா, இந்தியாவுக்குச் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைப்பது தொடர்பாக இதில் விவாதிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடுமையான அமளிகளுக்கு மத்தியில் PM, CM பதவி பறிப்பு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
News August 21, 2025
வெயிலில் இருந்து தப்பிக்க TVK தொண்டர்களின் செம ஐடியா

விக்கிரவாண்டி மாநாட்டின் அனுபவத்தால், 2-வது மாநாட்டில் தவெக தொண்டர்கள் உஷாராகி உள்ளனர். முதல் மாநாட்டில் வெயில் தாக்கம் காரணமாக பலர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதுபோன்ற ஒரு சூழல் வந்துவிடக்கூடாது என்பதற்காக காலையிலேயே மாநாட்டு திடலுக்கு வந்த தவெக தொண்டர்கள், தரைவிரிப்பை மேற்கூரையாக மாற்றியுள்ளனர். வெயிலில் இருந்து தப்பிக்க TVK தொண்டர்களின் யோசனையை பார்த்தீங்களா?