News January 22, 2026
FLASH: திமுகவில் இணையும் அமமுக முக்கிய புள்ளிகள்!

அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் மற்றும் தென் மண்டல அமைப்பாளராக உள்ள கடம்பூர் ஜமீன் மாணிக்கராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவருடன் வாசுதேவநல்லூர் Ex MLA-வும், OPS ஆதரவாளருமான மனோகரனும் திமுகவுக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று OPS ஆதரவாளரான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், இன்று <<18922895>>குன்னம் ராமச்சந்திரன்<<>> அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 28, 2026
தொகுதிப் பங்கீடு விவகாரம்.. ராகுலை சந்திக்கும் கனிமொழி

கடந்த 2 வாரங்களாக காங்கிரஸ், திமுக நிர்வாகிகளிடையே வார்த்தைப்போர் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் காந்தியை கனிமொழி நேரில் சந்திக்க உள்ளார். டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்கும் அவர், தொகுதி பங்கீட்டில் திமுகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் பங்கு, அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுகவிடம் காங்., வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
WhatsApp வேலை செய்ய காசு கட்டணுமா?

Meta நிறுவனம் தனது செயலிகளில் கட்டண சந்தா முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறதாம். இந்த கட்டண சந்தா மூலம், இன்ஸ்டாவில் மற்றவர்களின் Story-க்களை அவர்களுக்கு தெரியாமல் பார்க்கலாம். அதேபோல, WhatsApp Status-களை Ad இல்லாமல் பார்க்க சந்தா கட்ட வேண்டுமாம். முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் ₹433-க்கு இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. ஏனினும், தற்போது கிடைக்கும் அடிப்படை வசதிகள் இலவசமாக கிடைக்கும்.
News January 28, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500.. வந்தது HAPPY NEWS

குலவிளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து மகளிருக்கும் ₹2,000 வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். இது, ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவை விஞ்சும் வகையில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்த திமுக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


