News January 22, 2026
திருச்சி: பிரதமர் ஓய்வூதிய திட்டத்தில் இணைய அழைப்பு

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
திருச்சி: கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

திருச்சி வரகனேரி சந்தனபுரம் பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து சோமரசம்பேட்டை அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை மீட்டு திருச்சி GH-க்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார்.
News January 26, 2026
திருச்சி: சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு!

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சார்பில், பிரெயில் (BRAILLE) எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடும் நிகழ்ச்சி, திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வானது வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்றதில், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி கலந்து கொண்டு அதனை வெளியிட்டார்.
News January 26, 2026
நவல்பட்டு: துணை முதல்வரை வரவேற்ற ஆட்சியர்

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வருகை தந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


