News January 22, 2026
BREAKING: நடிகர் முரளி கிருஷ்ணா காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) காலமானார். ஜானகியின் ஒரே மகனான இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். அத்துடன், ’விநாயகுடு’, ‘மெல்லபுவு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், ‘கூலிங் கிளாஸ்’ என்ற மலையாள படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு, திரையுலகினர் மற்றும் எஸ்.ஜானகியின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
திமுகவுக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்த EPS

கொங்கு மண்டலத்தை கைப்பற்ற துடிக்கும் திமுகவுக்கு செக் வைக்க EPS வியூகம் வகுத்து கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, MLA-க்கள் முதல் தொண்டர்கள் வரை வீடு வீடாக சென்று, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைக்கின்றனர். மகளிர் உரிமைத்தொகை ₹2000-ஆக உயர்வு, 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதிகள் குறித்து பெண்கள், இளைஞர்கள் மத்தியில் எடுத்து கூறுகின்றனர்.
News February 8, 2026
CM ஸ்டாலின் நிகழ்ச்சியால் விஜய்க்கு அனுமதி மறுப்பு

வேலூரில் இன்று விஜய்யின் மக்கள் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்தோம். ஆனால், நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு முதல்வர் நிகழ்ச்சியை காரணம் காட்டி, எங்களுக்கு போலீசார் அனுமதி தரவில்லை என்று தவெக அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இப்போது SOP கொண்டுவந்துள்ளார்கள். அது முழுக்க முழுக்க பாரபட்சமான ஒன்று எனக்கூறிய அருண்ராஜ், இந்த SOP-யே தவெகவுக்கு எதிராகதான் உருவாக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.
News February 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 605 ▶குறள்: நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ▶பொருள்: காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.


