News January 22, 2026

ஈரோடு: உணவில் தரம் இல்லையா ? இத பண்ணுங்க!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் சாலையோரக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவின் தரம் அல்லது சுகாதாரத்தில் குறைபாடுகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம். உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 31, 2026

ஈரோடு: பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே க்ளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 31, 2026

நம்பியூர் அருகே துணிகர சம்பவம்!

image

நம்பியூர் அருகே கோசணத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் சண்முகம், தனது மனைவியுடன் கோவை சென்று திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 2.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில், நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.

News January 31, 2026

ஈரோடு: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

ஈரோட்டில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!