News January 22, 2026
சேலத்தில் அதிரடி தீர்ப்பு!

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அர்ஷத் அலி(40), தனது மனைவி பல்கிஷை(28) வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால், திருமணமான ஏழே மாதங்களில் பல்கிஷ் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அம்மாபேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அர்ஷத் அலியை கைது செய்தனர். மேலும் சேலம் மகளிர் நீதிமன்றம், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அர்ஷத் அலிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
Similar News
News January 25, 2026
சேலத்தில் மாணவி உயிரிழப்பு.. CM ஸ்டாலின் இரங்கல்

ஓசூரைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, சேலத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி விளையாடிக்கொண்டிருந்த போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். மாணவியின் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ள CMஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
News January 25, 2026
சேலம் : VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், சேலம் மாவட்ட மக்கள் 04272418735 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 25, 2026
சேலம்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

சேலம் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே<


