News January 22, 2026

குமரி: மனைவியை கொடுமை செய்த கணவன்

image

மார்த்தாண்டத்தை சேர்ந்த சுபைதா – ஜெரின் தம்பதியருக்கு 2021-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 84 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் வீட்டிலிருந்து கார் (ம) குடும்ப சொத்தில் ஒரு பங்கை வாங்கி வருமாறு அவரது கணவர் கொடுமைபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு.

Similar News

News February 12, 2026

குமரி : இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

image

கன்னியாகுமரி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 12, 2026

குமரியில் குப்பை வண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு

image

குளச்சல் பகுதியைச் சேர்ந்த கபீர் (66) என்பவர், தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ம் தேதி, பணியில் இருந்தபோது குப்பைகளைச் சேகரிக்க வந்த நகராட்சி குப்பை வண்டி அவர் மீது மோதி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முந்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நசீமாஅளித்த புகாரின் பேரில் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.

News February 12, 2026

குமரி: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

குமரி மாவட்டம், தெங்கம்புதூர், இராஜக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், தர்மபுரம், பிள்ளையார்புரம், முருங்கவிளை, பண்ணையூர், தெக்குறிச்சி, பிள்ளைதோப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

error: Content is protected !!