News January 22, 2026
தேனி: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ரோஹித் (19). தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் கல்லூரி முடிந்து நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த ரோஹித் அவர்களது பழைய வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
தேனி : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

தேனி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 23, 2026
ஆண்டிபட்டியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த தெய்வேந்திரன் அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை.
News January 23, 2026
தேனி: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT


