News January 22, 2026
விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஜன.30-ஆம் தேதி வரை படிவங்களை அளிக்கலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். ஆகையால், பெயர் சேர்க்கப்படாத நபர்கள் உடனடியாக தங்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்து, படிவங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News January 25, 2026
விழுப்புரம்: விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

விழுப்புரம் விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்பு செட் மானியத் திட்டம்,தற்போது அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது.இதில்,விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர்,வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.ஷேர் பண்ணுங்க
News January 25, 2026
விழுப்புரம் அருகே கொடூர விபத்து!

திண்டிவனம் வட்டம், அகூர், புது காலனி, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சு.ரவிச்சந்திரன்(55) இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவி சுமதி மகள் சுபாஷினி ஆகியோருடன் பைக்கில் அகூர் அருகே சென்றார். அப்போது அங்கு வந்த தனியார் சொகுசுப் பேருந்து பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சுமதி உயிரிழந்த நிலையில் வெள்ளி மேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 25, 2026
விழுப்புரம்: இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<


