News January 22, 2026
புதுவை: தற்காலிக செவிலியர்கள் பணி குறித்து அறிவிப்பு

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “222 செவிலியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஜனவரி 27 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
புதுவை: காவலர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள காவலர் (போலீஸ் கான்ஸ்டபிள் ) பதவிக்கான எழுத்துத் தேர்வு, வரும் (8.2.2026) ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் உள்ள ஐந்து மையங்களில் நடைபெற இருக்கின்றன. இத்தேர்வுக்கான அனுமதிச்சீட்டை தேர்வர்கள் https:// recruirtement .py.gov.in என்னும் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
News January 30, 2026
புதுச்சேரி: பாஜக தேர்தல் படிவம் இன்று வெளியீடு

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில், மாநில தலைவா் வி. பி. ராமலிங்கம் நேற்று செய்தியாளா்களிடம் கூறும்பொழுது, சட்டப்பேரவைத் தோ்தல்-2026 ஐ எதிா்கொள்ளும் வகையில் பாஜக சாா்பில் மக்களிடம் கருத்துக் கேட்டு தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிவத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா கடற்கரை காந்தி திடல் அருகே இன்று வெளியிடுகிறாா் என்றார்.
News January 29, 2026
புதுச்சேரி: திருமண தடை நீக்கும் சிறப்பு ஸ்தலம்!

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாடலீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!


