News January 22, 2026

EPS-ஐ சந்திக்கிறார் பியூஷ் கோயல்

image

தமிழகம் வந்துள்ள பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இன்று காலை 9 மணிக்கு EPS-ஐ சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் இணைந்த அன்புமணி, TTV தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து நேற்று பியூஷை சந்தித்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் இச்சந்திப்பு நிகழவுள்ளது. இதில், சீட் ஒதுக்கீடு, போட்டியிடவுள்ள தொகுதிகளில் மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.

Similar News

News April 8, 2026

ஸ்டாலின் தான் EPS-யிடம் கைக்கட்டி கெஞ்சினார்: காயத்ரி

image

உதயநிதிக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் பேசிய அவர், ​உதயநிதி தனது பிரசாரத்தில் சசிகலா காலில் EPS விழுந்த மாதிரி ஒரு போட்டோ காண்பிக்கிறார். ஆனால் ​அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர் காலில் விழுந்தார்கள் தெரியுமா என கேள்வி எழுப்பினார். ஸ்டாலின்தான் மெரினாவில் ஒரு இடத்துக்காக EPS-யிடம் கைகட்டி கெஞ்சி கேட்டார் எனவும் சாடியுள்ளார்.

News April 8, 2026

ஏப்ரல் 8: வரலாற்றில் இன்று

image

▶1950 – இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ▶1970 – இஸ்ரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசி 46 குழந்தைளை படுகொலை செய்தது. ▶1917 – தமிழக கர்நாடக வீணை கலைஞர் எஸ். இராமநாதன் பிறந்தநாள் ▶1894 – கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி நினைவுதினம். ▶2015 – தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவுதினம்.

News April 8, 2026

போர் பீதியால் வளைகுடா நாடுகளில் எச்சரிக்கை!

image

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பீதியால் வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதன்படி குவைத் தனது மக்களை 6 மணி நேரம் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பஹ்ரைன் அரசு, மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு கோரியுள்ளது. கத்தாரில் அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகமும் வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!