News January 22, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 25ந் தேதி காலை 6 மணி அளவில் நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து விழிப்புணர்வு மரத்தான் தொடங்கி உழவர் சந்தை, லட்சுமி நரசிம்மர் கோவில், பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பூங்கா சாலை வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் 500 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 26, 2026

நாமக்கல்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

நாமக்கல் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News January 26, 2026

நாமக்கல்லில் உச்சகட்ட பாதுகாப்பு

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

News January 26, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.10- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக முட்டை விலை 10 காசுகள் உயர்வடைந்த நிலையில் இன்றும் 5 காசுகள் உயர்வடைந்துள்ளது.

error: Content is protected !!