News January 22, 2026

நெல்லை 122 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ்

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 122 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ். துப்புரவு மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். விதிமுறைகளை மீறும் அமைப்புகள் மீது சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் கடும் சட்ட நடவடிக்கை என நெல்லை துணை மண்டல இ.எஸ்.ஐ இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.

Similar News

News March 11, 2026

தேர்தல் குறித்து போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை

image

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம் குறித்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

News March 11, 2026

திருநெல்வேலி: அரசின் கோர முகத்தை வெளிப்படுத்தியது – MLA

image

நெல்லை எம் எல் ஏ நைனார் நாகேந்திரன் செய்தி குறிப்பில், மதிய உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத போலி சமூகநீதி மாடல் அரசு இது. கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 44 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலி சமூக நீதி மாடல் அரசின் கோர முகத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

திருநெல்வேலி: சரமாரியான கத்திக்குத்து – பெண் வாக்குமூலம்

image

கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன் தினம் மாயாண்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது தாயை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அவரது தாய் நிலை குலைந்த நிலையில் தற்காப்புகாக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாயாண்டியின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி இறந்தார்.

error: Content is protected !!