News January 22, 2026
ராணிப்பேட்டை: அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

சம்பத்ராயன்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராஜி 51. அரக்கோணம் தாலுகாவில் நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று ஜன.21ம் தேதி மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நெமிலி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Similar News
News January 31, 2026
ராணிப்பேட்டையில் டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க இங்கே <
News January 31, 2026
ராணிப்பேட்டையில் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

ராணிப்பேட்டை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 31, 2026
ராணிப்பேட்டை: குளத்தில் மிதந்த ஆண் சடலம்!

புதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார் குப்பத்தில் உள்ள குளத்தில் 60 வயது ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என விசாரித்து வருகின்றனர்.


