News January 22, 2026
பெண்கள் விரோத திமுக அரசை தூக்கியெறிவோம்: அன்புமணி

தமிழகத்தில் திமுக ஆட்சியை எதிர்த்து பல்வேறு இடங்களில் அன்றாடம் போராட்டம் நடைபெற்று வருவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், பெண்கள் விரோத திமுக அரசு வரும் தேர்தலில் தூக்கியெறியப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம் உள்ளதாகவும், அதனால் கொடூர கொலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
வேலூர்: தமிழ் தெரிந்தால் வங்கியில் வேலை ரெடி!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. இங்கு <
News January 31, 2026
பிப்ரவரி 13-ம் தேதி ஜன நாயகன் ரிலீஸ்?

‘ஜன நாயகன்’ படம் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக படக்குழு மேல்முறையீடு செய்த நிலையில், சென்சார் போர்டும் SC-யில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்தது. இதனால் படம் வெளியாவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பிப்.13-ல் ஜன நாயகன் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 31, 2026
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஜாக்பாட்!

மத்திய பட்ஜெட்டில் TN-க்கு பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார மண்டலம்(SEZ) அறிவிக்கப்படவுள்ளதாம். மேலும், உதான் திட்டத்தில் ஏர்போர்ட்கள், சாலை, நீர்வழி மேம்பாடுகளுக்கு பல கோடிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கடந்த பட்ஜெட்டில் பிஹாரில் பேரவைத் தேர்தலை மையாக கொண்டு அங்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.


