News January 22, 2026
சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை

மத்திய அரசு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு (SIDBI) ₹5,000 கோடி பங்கு மூலதன ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடன் வழங்குவதை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இதனால், சொந்த தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 13, 2026
கூட்டணி கட்சிக்கு எதிராகவே கருத்து சொன்ன வைகோ

கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருவதாக வைகோ கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு, அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை என்ற அவர், ஆனால் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது காங்கிரஸின் இந்த கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது என்றார். மேலும், மதிமுக இதுபோல எவ்வித நிபந்தனையும் விதித்ததில்லை என தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
வெறும் நாணயங்கள் அல்ல.. நினைவுகள்!

மேலே உள்ள போட்டோவில் இருப்பவை, ₹2 காசு முதல் ₹25 காசு வரையிலான நாணயங்கள் ஆகும். இவையெல்லாம், இப்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், 1990ல் பிறந்தவர்களின் மறக்க முடியாத நினைவுகள். கமர்க்கட்டு, விரலில் மாட்டிக் கொள்ளும் சுத்து மிட்டாய், தேன் மிட்டாய், பட்டாணி என அப்போதெல்லாம் சுவைத்தவை நினைவிற்கு வந்து போகிறது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது இந்த நாணயங்கள் இருந்ததா? உங்கள் நினைவுகளை சொல்லுங்க.
News February 13, 2026
ELECTION DATE: தேர்தல் ஆணையம் புது அப்டேட்

TN தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன், துணை தோ்தல் ஆணையா்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனா். அதன் பின்னா் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக, நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், SIR பணிகள், இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் தேதி ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மிக விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


