News May 7, 2024
வரலாற்றில் இன்று: மே 7

➤ 1861 – நோபல் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்.
➤ 1895 – ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பர்க்கில் அறிமுகப்படுத்தினார்.
➤ 1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
➤ 2000 – விளாதிமிர் புதின் ரஷ்யாவின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.
Similar News
News March 25, 2026
காங்கிரஸில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

காங்கிரஸில் இருந்து விலகிய அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் EPS-க்கு அமோக ஆதரவு இருப்பதால் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்ததை பலரும் விரும்பவில்லை; கட்சியிலிருந்து வெளியேற நினைக்கின்றனர் என <<19471228>>ஆதவ் அர்ஜுனா<<>> இன்று காலை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2026
3 மாத கருவை ஃப்ரிட்ஜில் வைத்த தம்பதி.. SHOCK

ஃப்ரிட்ஜில் உணவு பொருள்களுக்கு நடுவே அழுகிய நிலையில் ஒரு சிசு கண்டெடுக்கப்பட்ட அருவருப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் திரிச்சூரில் 3 மாத கர்ப்பிணியின் கரு கலைந்துள்ளது. அவர் நர்ஸ் என்பதால் தொப்புள் கொடியை அறுத்து கருவை எடுத்துள்ளார். பின்னர், என்ன செய்வதென்று தெரியாமல் தம்பதி இருவரும் அதை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸுக்கு தகவல் கிடைக்க, தம்பதி மீது வழக்கு பதிந்துள்ளனர்.
News March 25, 2026
விஜய்யை தொடரும் 27-ம் தேதி சென்டிமெண்ட்!

சமீபத்தில் விஜய்யை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் பெரும்பாலானவை 27-ம் தேதி நடப்பது கவனத்தை ஏற்படுத்தியுள்ளது *செப் 27: கரூர் மாநாடு *அக். 27: கரூர் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்தார் *நவ. 27: செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் *டிச.27: ‘ஜன நாயகன்’ ஆடியோ லாஞ்ச் *ஜன 27: ‘ஜன நாயகன்’ விசாரணைக்கு வந்தது *பிப். 27: விவாகரத்து வழக்கு செய்தி *மார்ச் 27: <<19470695>>தவெக <<>>வேட்பாளர்கள் அறிமுகம்.


