News May 7, 2024
குஜராத்தில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத் உள்பட 12 மாவட்டங்களின் 94 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் 11 பள்ளிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 16 பள்ளிகளின் வளாகத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அது போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.
Similar News
News April 2, 2026
திமுக மீண்டும் வந்தால் கருணாநிதி தேசம்: வானதி

NDA ஆட்சிக்கு வந்தால் TN-ன் பெயரை, தட்சிண பிரதேஷ் என்று மாற்ற தயங்க மாட்டார்கள் என ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதுகுறித்து பேசிய வானதி சீனிவாசன், உலகின் மூத்த மொழி தமிழ் என்று முழங்கி வரும் PM மோடி, தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவார் என்று ஸ்டாலின் கூறுவது அபத்தமானது என சாடியுள்ளார். அதேவேளை, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் TN-ன் பெயரை ‘கருணாநிதி தேசம்’ என்று மாற்றவும் தயங்காது எனவும் கூறியுள்ளார்.
News April 2, 2026
கார்களின் விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹1 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
News April 2, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய PHOTO

த்ரிஷா தனது நாய்க்குட்டியுடன் கோயிலுக்கு சென்ற போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், இருவரும் செம க்யூட்டாக இருப்பதாக சொல்லி ஹார்ட்டின்களை பறக்கவிடுகின்றனர். இஸ்ஸி என்ற அந்த செல்லத்தை தனது மகள் போலவே அவர் வளர்த்து வருகிறார். ஸோரோ என்ற நாயை மகனாக பாவித்து வளர்த்த த்ரிஷா, அதன் மறைவுக்கு பின் மிகவும் மனமுடைந்து போனது குறிப்பிடத்தக்கது.


