News January 22, 2026
திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
Similar News
News January 27, 2026
திருப்பத்தூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

திருப்பத்தூர் மாவட்ட மக்களே இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 27, 2026
ஆம்பூரில் கடப்பா கல் விழுந்து குழந்தை பலி

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ரபீக் நகர் பகுதியை சேர்ந்தவர் வாகித் இவரது 3 வயது குழந்தை, அபியா தஸ்கின், இந்த குழந்தை நேற்று (ஜன.26) இரவு வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது, வீட்டின் கேட் மீது இருந்த கடப்பா கல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
News January 27, 2026
பாட்டி திட்டியதால், மனமுடைந்த 8 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட நடராஜபுரம் பகுதியை சேர்ந்த தீபாளி என்பவரது மகள் ஜெஸி பிரிசிலா என்ற 8 ஆம் வகுப்பு மாணவி இன்று (26) வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த்போது, அவருடைய தம்பி இருவரிடையே டிவி பார்ப்பதில், தகராறு ஏற்பட்டதால், ஜெஸி பிரிசிலாவை அவரது பாட்டி திட்டியுள்ளார், இதனால் மனமுடைந்த மாணவி, உள்அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில்,ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..


