News May 6, 2024

பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை- கலெக்டரிடம் மனு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்நாடக மாநிலத்தை சார்ந்த பாலியல் குற்றவாளி பாராளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை கோரி மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி டாக்டர் நிரோஷா மனு கொடுத்தார். அப்பொழுது மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வே.வீரமணி நன்னிலம் வட்டார தலைவர் வெங்கடேசன் மாநில எஸ்சி துறை மாநில செயலாளர் கிஷோர், நகர காங்கிரஸ் பொதுச்செயலாளர் பவன் குருமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News

News November 27, 2025

திருவாரூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

image

முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் கோரையாறு பகுதியில் சப்.இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முகம்மது ஹாலிக் (19) என்பவர் 150 கிராம் எடையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் முகம்மது ஹாலிக் மீது வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

News November 27, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெற்றது. மேலும் இது வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டதின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.27) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2025

திருவாரூர்: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவாரூர் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8825669037) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!