News January 21, 2026
செங்கோட்டையன் தவெகவில் இருந்து விலகலா? EXPLANATION

தவெகவில் இருந்து <<18906535>>செங்கோட்டையன் விலக<<>> இருப்பதாக பரவிய செய்திக்கு புஸ்ஸி ஆனந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பனையூரில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எனக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக செய்தி போடுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், எங்களை பொறுத்தவரை விஜய்யின் கீழ் அனைவருமே தொண்டர்கள்தான் என கூறினார்.
Similar News
News February 14, 2026
மௌனம் காக்கிறாரா விஜய்?

சேலம் <<19134315>>பிரசார கூட்டத்தில்<<>> ஏற்பட்ட உயிரிழப்பு, செய்தியாளர்கள்-நிர்வாகிகள் மோதல், தொண்டர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் TVK மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால், இதுபற்றி விஜய் வாய் திறக்காதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மாற்றத்தை ஏற்படுத்துவேன் என பேசும் விஜய் முதல் வேலையாக நிர்வாகிகள், தொண்டர்களை கண்டித்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News February 14, 2026
தங்கம் விலை.. மக்களுக்கு நிம்மதி

தங்கம் விலை சில வாரங்களாக ₹5,000, ₹10,000 என தொடர்ந்து உயர்ந்து மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், இந்த வாரம் சற்று நிம்மதி அளித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,560-க்கும், 1 சவரன் ₹1,16,480-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தைவிட ₹1,120 அதிகம். அதேநேரம், வெள்ளி விலை முந்தைய வாரத்தைவிட கிலோவுக்கு ₹5,000 குறைந்து ₹2.80 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
News February 14, 2026
நயினாரின் சர்ச்சை கருத்துக்கு திமுக ரியாக்ஷன்

RSS-ன் அடிமையாக மாறிவிட்டதாலேயே <<19135589>>விஜய் – த்ரிஷா<<>> பற்றி சர்ச்சைக்குரிய வகையில் நயினார் பேசியிருப்பதாக TKS இளங்கோவன் விமர்சித்துள்ளார். MGR போன்ற தலைவர்களை பின்பற்றிய நயினார், இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுகளை தவிர்த்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பெண்களை சரிசமமாக நடத்தாமல், மோசமாக நடத்தும் மனுதர்மத்தை பாஜக தலைவர்கள் பின்பற்றுவதால்தான், தமிழர்கள் பாஜகவை ஏற்பதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.


