News January 21, 2026

Zomato நிறுவனர் திடீர் பதவி விலகல்!

image

Zomato, Blinkit ஆகியவற்றின் தாய் நிறுவனமான Eternal நிறுவனத்தின் CEO, நிர்வாக இயக்குநர் பதவிகளில் இருந்து, அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் விலகியுள்ளார். Blinkit நிறுவனத்தின் CEO அல்பிந்தர் சிங் Eternal CEO ஆக பொறுப்பேற்றுள்ளார். 2025-ன் 3-வது நிதியாண்டில் அந்நிறுவனம் ₹102 கோடி வருமானம் ஈட்டியபோதும், 10 நிமிட டெலிவரிக்கு அரசு தடைவிதித்த நிலையில், இத்தகைய மெகா மாற்றம் நிகழ்ந்துள்ளது.

Similar News

News February 7, 2026

பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிப்பு: திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

image

பிப்.12-ல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக & அதற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடம் & பேரூர், ஒன்றிய அளவிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 7, 2026

அதிமுக-பாஜக கூட்டணிக்கு OPS, சசிகலா ஆதரவு: தினகரன்

image

OPS மற்றும் சசிகலா தனி பாதையில் செல்லமாட்டார்கள் என TTV தினகரன் உறுதியாக கூறியுள்ளார். அவர்களால் அதிமுகவுக்கு எந்த பாதகமும் ஏற்படாது என்ற அவர், அதிமுக-பாஜக வெற்றிக்காக அவர்கள் ஆதரவளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். EPS-ன் எதிர்ப்பால் OPS-ம், சசிகலாவும் NDA-வில் இணைய வாய்ப்பே இல்லை என கூறப்பட்ட நிலையில், TTV இப்படி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பம் ஏற்படுத்தியுள்ளது.

News February 7, 2026

Epstein Files-ல் சிக்கிய பிரபல இந்திய இயக்குநர் இவரா?

image

உலகம் முழுவதையும் உலுக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில், ‘Bollywood Guy’ என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. இது பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் தான் என பலரும் கூறிவந்த நிலையில், அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளில் நான் சென்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் பீஜிங்கிற்கு தான் இதுவரை சென்றதே இல்லை எனவும், எனவே இதுபோன்ற விஷயங்களை நம்பவேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!