News January 21, 2026
WhatsApp-ல் வரும் புது அசத்தல் அப்டேட்!

WhatsApp பயனர்களுக்கு புதிய வசதி ஒன்றை வழங்க உள்ளது. மொபைல் WhatsApp-ல் செய்த ஆடியோ & வீடியோ அழைப்புகளை இனி WhatsApp Web மூலமும் மேற்கொள்ளலாம். Group Call மூலம், 32 பேருடன் ஒரே நேரத்தில் பேச முடியுமாம். இதற்காக, WhatsApp-ஐ கம்ப்யூட்டரில் Install செய்ய தேவையில்லை என்றும் Web Browser-லியே பயன்படுத்த எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஓரிரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
Similar News
News February 4, 2026
திருக்குறளுக்கு கூட இம்முறை பட்ஜெட்டில் இடமில்லை: CM

மத்திய பட்ஜெட்டில் TN-க்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எப்போதும் திருக்குறளையாவது பட்ஜெட்டில் சொல்வார்கள்; இம்முறை அதைக்கூட பயன்படுத்தவில்லை என சாடியுள்ளார். மேலும் சிறப்பு திட்டங்கள் கொண்டுவந்தாலும் வாங்களிக்க மாட்டார்கள் என நினைத்துக்கொண்டு TN-க்கு மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News February 4, 2026
3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்: EPS-ன் தேர்தல் வாக்குறுதி

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என EPS தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளார். மேலும், முதியோர் உள்ளிட்டோருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ₹ 2,000 ஆக உயர்த்தப்படும், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.
News February 4, 2026
கல்விக் கடன் தள்ளுபடி: EPS வாக்குறுதி

அதிமுக தேர்தல் வாக்குறுதியாக கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என EPS அறிவித்துள்ளார். மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கையை வைத்து அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுகிறது என்ற அவர், மேலும் பல அறிவிப்புகள் வரும் என்றார். அத்துடன், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள், மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


