News January 21, 2026

2000’s ஜாம்பவான்கள் ரீயூனியன்! (PHOTO)

image

2000-களின் காலகட்டத்தில் கிரிக்கெட் பார்க்க தொடங்கியவர்களுக்கு இந்த போட்டோவில் உள்ள ஜாம்பவான்களை பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. சேவாக்கின் அதிரடி, யுவராஜின் Six 6’s, முகமது கைஃபின் தரமான கேட்ச்கள், நெஹ்ரா மற்றும் அகர்கரின் ஸ்விங் பவுலிங் என ஒவ்வொன்றும் உங்களுடைய நினைவில் நிழலாடும். சமீபத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி தான் SM-ல் தீயாக பரவுகிறது. இதில் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார்?

Similar News

News January 27, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 593 ▶குறள்: ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். ▶பொருள்: ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

News January 27, 2026

தொப்பியின் விலை ₹4.2 கோடி!

image

ஆஸி. ஜாம்பவான் டான் பிராட்மேனின் தொப்பி ₹4.2 கோடிக்கு லாயிட்ஸ் கோல்ட் கோஸ்ட் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய தொப்பியை பிராட்மேன் பரிசாக அளித்தார் . ‘DG பிராட்மேன்’ & ‘SW சோஹோனி’ பெயர்கள் பொறிக்கப்பட்ட இத்தொப்பி, கடந்த 2024-ம் ஆண்டில் ஏலம்போன அவரது மற்றொரு தொப்பியை (₹2.63 கோடி) விட அதிக விலைக்கு சென்றுள்ளது.

News January 27, 2026

என்னை வம்புக்கு இழுக்காதீர்: தளபதிக்கு ஜோதிமணி WARNING

image

‘ஆட்சியில் பங்கு’ என பேசி வரும் ஜோதிமணிக்கு சீட் கொடுக்க கூடாது என்று திமுக <<18969847>>MLA தளபதி <<>>கூறியிருந்தார். இந்நிலையில், தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது; களத்தில் நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதி அனுசரித்துப் போகிறோம், அமைதி காக்கிறோம். இதுபோன்று பேசி, CM ஸ்டாலினை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது என ஜோதிமணி எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!