News January 21, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. பெரியளவில் தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 60 காசுகள் சரிந்துள்ளது. இதன்மூலம், வரலாறு காணாத அளவிற்கு ஒரு டாலர் ₹91.74 ஆக உயர்ந்துள்ளது. டாலருக்கான வலுவான தேவை, உலக அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால், இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2025-ல் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 4.95% சரிந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 31, 2026
சர்வாதிகாரிகளின் DNA இபிஎஸ்: MRK பன்னீர்செல்வம்

CM ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்படுவதாக <<19014905>>EPS <<>>விமர்சித்ததற்கு அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். மோடி என்ற சர்வாதிகாரியை போற்றும் EPS, சர்வாதிகாரி பற்றி பாடம் எடுப்பதா என்றும், உலக சர்வாதிகாரிகள் அத்தனை பேரின் DNA-வாக EPS உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் திமுக மீண்டும் ஆட்சி அமைத்து EPS-யின் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் வீழ்த்தும் என தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள்; அந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே, மகளிர் உரிமை தொகை உயர்வு பற்றி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த தேர்தல் வாக்குறுதியில் அதற்கான அறிவிப்பு இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
News January 31, 2026
கூந்தலை அவிழ்த்துவிட்டு தூங்கலாமா?

இரவில் பெண்கள் தலைமுடியை அவிழ்த்துவிட்டு தூங்குவது முடி ஆரோக்கியத்துக்கு நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தூங்குவதால் முடிக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கப் பெற்று ஈரப்பதம் தேங்காமல் இருக்கும். இதனால் பொடுகு, அரிப்பு, பூஞ்சை தொற்று, முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் குறையும் என்றும் தெரிவிக்கின்றனர். எனவே, கூந்தலை அவிழ்த்து முடியையும் கொஞ்சம் தூங்க வைக்கலாமே. SHARE IT.


