News January 21, 2026

இராம்நாடு: கண்மாயில் தவறி விழுந்த இளைஞர் பலி

image

தேவகோட்டையை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பாரதி(28). இவர், நேற்று கட்டடப் பணிக்காக திருவாடானை அருகே கல்வழியேந்தல் கிராமத்திற்கு வந்தார். கட்டடத்ததிற்கு தண்ணீர் எடுக்க அருகேயுள்ள கண்மாயிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, கண்மாய்க்குள் தவறி விழுந்தவர் மூழ்கி உயிரிழந்தார். திருவாடானை போலீசார் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 28, 2026

ராம்நாடு: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மீனவர் குடும்பங்கள்

image

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட்.08 அன்று மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினர் கைது செய்து 18 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1.46 கோடி அபராதம் விதித்து சிறையில் அடைத்தது. சிறையில் உள்ள 10 மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து மீனவர்களை வீடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

News January 28, 2026

ராம்நாடு : EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

ராமநாதபுரம் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

image

ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் தங்குமிடம் மோசமாக இருந்ததை கண்ட நீதிபதிகள் மெஹபூப் அலிகான் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். நம் உறவினர்களை இங்கு தங்க வைப்போமா? இவர்களும் மனிதர்கள்தானே எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்த 10 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

error: Content is protected !!