News January 21, 2026
ஊழல் ஆட்சியை நிச்சயம் தோற்கடிப்போம்: பியூஷ்

NDA கூட்டணியில் அமமுக இணைந்தது தனிப்பட்ட முறையில் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். Ex CM ஜெயலலிதாவின் தலைமையில் TN முதன்மை மாநிலமாக இருந்ததாக கூறிய அவர், அவர்கள் வழங்கிய நல்லாட்சியை NDA கூட்டணி வழங்கும் என்றார். மேலும், ஊழல் நிறைந்த திமுகவை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News January 26, 2026
பாஜக குறித்து விஜய் பேசாதது ஏன்? அருண்ராஜ் பதில்

தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், பாஜகவின் பெயரையே பயன்படுத்தவில்லையே என்ற கேள்விக்கு அருண்ராஜ் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு தேர்தல் களத்தில் இருக்கும் கட்சியை குறித்து மட்டுமே விஜய் பேசியதாக அவர் விளக்கமளித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை எனவும், இந்த தேர்தலில் திமுக – தவெக இடையே மட்டுமே போட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 26, 2026
உலகின் மிக பழமையான கொடி எது தெரியுமா?

தேசியக்கொடி என்பது அடையாளம் மட்டுமின்றி, மக்களுடன் இரண்டற கலந்த எமோஷனாகும். காலத்திற்கு ஏற்றார் போல பல நாட்டின் கொடிகள் மாறினாலும், 1625-ல் இருந்து ஒரு நாடு இப்போது வரை ஒரே கொடியை பயன்படுத்தி வருகிறது. நாம் பயன்படுத்தும் இந்தியாவின் தேசியகொடி 1947-ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி என்றால் உலகின் பழமையான கொடி என்பதை அறிய மேலே உள்ள படத்தை இடது பக்கமாக Swipe பண்ணுங்க.
News January 26, 2026
ஊழல் பல்கலை.,யின் வேந்தர் PM மோடி: உதயநிதி

இந்தியாவில் ஊழலுக்கு ஒரு பல்கலை., இருந்தால் அதற்கு PM மோடி தான் வேந்தர் என உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு குறித்தும், ஊழல் குறித்தும் பேச PM மோடி, அமித்ஷாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை வைத்துக் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மோடி முயல்வதாகவும் சாடியுள்ளார்.


