News January 21, 2026

திண்டிவனம்: 3 வாலிபர்களுக்கு சிறை!

image

விழுப்புரம்: திண்டிவனம், சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்தவர் சீதாராமனின்(69) பைக், மேலும் இரண்டு பைக்கள் கடந்த 17.06.2025 அன்று திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பூனை வினோத்(25), செல்வ ஸ்ரீவர்தன்(25), பிரசாந்த் என்ற எலி(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர், இதில், வினோத்துக்கு 3 ஆண்டுகள் சிறை, மற்ற இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Similar News

News January 24, 2026

விழுப்புரத்தில் உடல் கருகி பலி!

image

செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நிலாம்பாள்(73). இவர், கடந்த ஜன.18ஆம் தேதி வீட்டில் விளக்கேற்றிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீ பற்றி எரிந்தது. இதில், கடுமையான தீக் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்கு சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனினி உயிரிழந்தார்.

News January 24, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் இன்று வெளியிடப்பட்டது. இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!