News January 21, 2026

BREAKING: விஜய் கட்சிக்கு பொதுச் சின்னம்?

image

தவெகவின் சின்னம் வெளியாகும்போது உலகமே அதனை உற்றுநோக்கும் என்றும் அக்கட்சியினர் கூறிவந்தனர். இந்நிலையில், தவெகவுக்கு பொதுச் சின்னம் அளிக்க ECI பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தேர்தலில் போட்டியிடாமல் அங்கீகரிக்கப்படாத கட்சியாக தவெக உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். விசில், மோதிரம் என ஏற்கெனவே பேச்சு எழுந்துள்ள நிலையில், எந்த சின்னம் கொடுத்தால் சரியாக இருக்கும்?

Similar News

News February 13, 2026

பாஜக போட்டியிடும் தொகுதிகள்.. இன்று முடிவு

image

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை, இன்று திருச்சி வரும் அமித்ஷா தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்க அதிமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் லிஸ்டை ஆராய்ந்து, எந்தெந்த இடங்களில் போட்டியிடலாம் என்பது குறித்து அமித்ஷா இறுதி முடிவு எடுக்கிறார்.

News February 13, 2026

எதிர்கட்சியா கூட திமுக வராது: செல்லூர் ராஜு

image

திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ‘தாலி கட்டிய மனைவி’ போல் ஆகிவிட்டனர் என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; தேர்தல் முடிந்துவிட்டால் மக்கள் பிரச்னையில் கூட்டணியில் இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், திமுக கூட்டணி தலைவர்கள் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பதில்லை என்றார். மேலும், 2026-ல் அதிமுக ஆட்சியமைக்கும், எதிர்கட்சியா கூட திமுக வராது என விமர்சித்தார்.

News February 13, 2026

பிரதமர் வெளிநாட்டு பயணம்.. ₹462 கோடி செலவு

image

கடந்த 5 ஆண்டுகளில் PM மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ₹462.58 கோடி செலவிடப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, யுஏஇ, யுகே, ஆப்ரிக்கா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட 43 நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் மட்டும் பிரதமர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றபோது ₹25.5 கோடி செலவிடப்பட்டது. இதுதான் பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களிலேயே அதிக செலவான தொகை.

error: Content is protected !!