News January 21, 2026
நாகர்கோவில்: கல்லூரி மாணவர் தற்கொலை

நாகர்கோவில் பள்ளிகளைப் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (21). கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், சக மாணவர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் ஆகாஷ் கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த ஆகாஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
குமரி: இனி Whatsapp ல் சிலிண்டர் BOOK பண்ணுங்க..

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.
News January 30, 2026
குமரி: EXAM இல்லை… போஸ்ட் ஆபீஸ் வேலை

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
குமரி: உதவி பேராசிரியரிடம் நகை அபேஸ் செய்த கும்பல்

குமரி, சித்தன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (30). இவர் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை செல்போனில் ஒருவர் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற அவரை ஆபாசமாக பேசிய அந்த நபர் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து செல்போன் எண் வைத்து விசாரித்து வருகின்றனர்.


