News January 21, 2026
காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன-23-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எம். கிசான் திட்டத்தின் 22-வது தவணைத் தொகையைப் பெற, விடுபட்ட 2,654 விவசாயிகள் உடனடியாக e-KYC மற்றும் ஆதார் இணைப்பை மேற்கொள்ள ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், டிஜிட்டல் விவசாய அடையாள எண் பதிவு செய்யவும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
காஞ்சிபுரம் பக்தர்களுக்கு இனிப்பான செய்தி!

காஞ்சிபுரம் காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். யானைகளின் உடல்நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே வனத்துறை கொண்டு செல்லப்பட்ட 3 யானைகளை விரைவில் திரும்பும் என எதிர்பார்ப்பு.
News January 23, 2026
ஸ்ரீபெரும்புதூர்: சம்பள பாக்கியால் தற்கொலை முயற்சி!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரமேஷ், சம்பள பாக்கி தராததால் நேற்று(ஜன.22) மாலை மதுபோதையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், ரமேஷிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
News January 23, 2026
BREAKING: காஞ்சியில் கனமழை வெளுக்கும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.


