News January 21, 2026
நாகையில் 700 பேர் கைது

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். இதில், 20சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஆர்பட்டத்தில் ஈடுப்பட்ட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 23, 2026
நாகை: விவசாயிகள் போராட்டம்

வேதாரண்யம் அடுத்த தகடடூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பஞ்சநதிக்குளம் கிராமத்தில் தனியார் நிறுவனத்திடம் கலப்பட நெல் விதை வாங்கி தெளித்ததில், பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, விதை நெல் விற்பனை செய்த கடைக்கு முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வட்டார விவசாயிகள் சங்கத்தினர், பாதிகப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
News January 23, 2026
நாகை: கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைப்பு!

நாகை மாவட்டத்தில் கடலில் மீன்வளத்தை பெருக்க ரூ.12 கோடி மதிப்பில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணியை மீன்வளர்ச்சி கழக தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பணி நாகூர் மற்றும் சாம்பந்தான்பேட்டை கடலில் பகுதியில் 5 நாட்டிக்கல் தொலைவிற்கு 39 இடங்கில் நடைபெறுகிறது. இதனால் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து மீனவர்களின் நேரம் மற்றும் பணம் மிச்சமாகுமென கூறப்படுகிறது. இந்நிகழ்வில், அலுவலர்கள் பங்கேற்றனர்.
News January 23, 2026
நாகை – திருச்சி ரயில் ரத்து

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக காரைக்காலில் இருந்து நாகை வழியாக திருச்சி செல்லும் பயணிகள் ரயில் எண் 76819 மற்றும் 76820 ஆகிய ரயில்கள் வருகின்ற 22.24,27,29 ஆகிய நான்கு நாட்கள் காரைக்கால் – தஞ்சை இடையே ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.


