News January 21, 2026

சிவகங்கை ரயில் நிலையத்தில் முக்கிய ரயில் நிறுத்த அறிவிப்பு

image

சிவகங்கை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சிவகங்கை ரயில் நிலையத்தில் தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ், வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், இராமேஸ்வரம்- பனாரஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று முக்கிய ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாக வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 25, 2026

சிவகங்கை: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE IT

News January 25, 2026

சிவகங்கை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

image

சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் அவரது தாயார் வீட்டிற்கு சென்ற போது வீட்டிலிருந்து ரூ.20,000 திருடு போனது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அதே பகுதியை சேர்ந்த அங்கையர்கரசி, ராகுல், அருண், பார்வதி உள்ளிட்ட 5 பேர் சங்கீதாவை அவதூறாக பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் விசாரணை.

News January 25, 2026

சிவகங்கை: சிறுவன் மீது வாகனம் மோதி விபத்து

image

கொந்தகை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் சாலையோரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது தவத்தரேந்தல் பகுதியை சேர்ந்த யோகேஷ் (24) என்பவர் ஓட்டிச் சென்ற டாடா ஏஸ் வாகனம் சிறுவன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்புவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

error: Content is protected !!