News January 21, 2026
மதுரை: லாரி உரிமையாளர் தற்கொலை.!

வாடிப்பட்டி அருகே சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் முத்து கருப்பன்(43). இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது. தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்ததை அவர் மனைவி கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மன அழுத்தம் அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். பாலமேடு போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 3, 2026
மதுரை: வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழப்பு

செல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(47) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வீட்டின் படிக்கட்டில் ஏறியபோது தவறி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில் ஜராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த காரல்மார்க்ஸ் என்பவர் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
மதுரை: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

மதுரை அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரபாகரன்(29) என்பவர் சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி பொற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரபாகரணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.