News January 21, 2026
இராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.15 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Similar News
News January 27, 2026
பரமக்குடி & கமுதி பகுதிகளில் நாளை மின்தடை

பார்த்திபனூர், கமுதக்குடி, பிடாரி சேரி, நெல்மாத்தூர், புதுக்குடி, சுடியூர், நரிக்குடி உள்ள 33/11 என்ற துணை மின் நிலையம் மற்றும் கமுதி தாலுகா, அபிராமம், பசும்பொன், கே வேப்பங்குளம், பேரையூர், பாப்பான்குளம் உள்ள 33/11 என்ற துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் காரணமாக நாளை ஜன.28ம் தேதி காலை 9 மணி முதல் காலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.*SHARE IT
News January 27, 2026
கச்சதீவில் தேசிய கொடி ஏற்ற சென்ற 28 பேர் கைது

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையைக் கண்டித்தும் அங்கு தேசியக்கொடி ஏற்ற முயன்ற காவிப்புலிப்படை அமைப்பினர் 28 பேரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர். அக்கட்சியின் தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் படகு மூலம் செல்ல முயன்றபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
News January 27, 2026
ராமநாதபுரம்: உடலை வாங்க மறுத்து போராட்டம்

வைரவனேந்தல் அருகே காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(35). நேற்று முன்தினம் இவர் உறவினர் வீட்டிற்கு சென்று அதிகாலை 12.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது குளத்தூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகன மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதியும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


