News January 21, 2026
வைத்திலிங்கம் விலகினார்.. OPS-க்கு பேரதிர்ச்சி

வைத்திலிங்கம் தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக திமுக அலுவலகம் சென்று CM முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்ள உள்ளார் என்கின்றனர். தஞ்சை ஒரத்தநாடு MLA-வாக இருக்கும் இவர், 2001-2006-ல் வனத்துறை & சுற்றுச்சூழல் அமைச்சர், 2011-2016-ல் நகர்புற வளர்ச்சி அமைச்சர், பிறகு MP-யாக இருந்தார். இந்நிலையில் அணிக்கு பலம் சேர்த்த ஒருவர் எடுத்துள்ள இம்முடிவு OPS-க்கு அதிர்ச்சியளித்துள்ளது.
Similar News
News February 3, 2026
BREAKING: தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹22,800 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது. ஆனால், <<19039267>>இன்று 2 முறை விலை உயர்ந்ததால்<<>> பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை $250.46 வரை (இந்திய மதிப்பில் ₹22,633) உயர்ந்துள்ளதால், வரும் நாள்களிலும் விலை உயரக்கூடும் என கூறப்படுகிறது.
News February 3, 2026
நான் பேசுவதை திட்டமிட்டு தடுக்கிறார்கள்: ராகுல் காந்தி

நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மத்திய அரசு தூண்டுதலின் பேரில் எதிர்க்கட்சி தலைவரைத் தடுக்க சபாநாயகர் கட்டாயப்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஓம் பிர்லாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் தான் பேசுவதை தடுக்க ஒரு திட்டமிட்ட முயற்சி நடப்பதாகவும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுப்பது ஒரு மோசமான சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News February 3, 2026
நடிகை ராஜேஸ்வரி தற்கொலை.. சக நடிகர்கள் வேதனை

நடிகை ராஜேஸ்வரியின் தற்கொலை மீண்டும் சின்னத்திரை ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது. அதற்கு காரணம், அவர் நடித்துவந்த சிறகடிக்க ஆசை சீரியலில் ராஜேஸ்வரி இறப்பது போன்ற காட்சி நேற்று ஒளிபரப்பானதுதான். இதுகுறித்து வேதனையுடன் சக நடிகர் <<19035018>>பழனியப்பன்<<>> வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, ராஜேஸ்வரியின் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை என அந்த சீரியலின் நடிகர்கள் பலரும் SM-ல் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.


