News January 21, 2026

வாழப்பாடி அருகே சிறுமியை சீரழித்த நபர் கைது

image

பெத்தநாயக்கன்பாளையம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வாழப்பாடி மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் துன்புறுத்திய கட்டுமான பணியாளர் மணி என்பவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று அவரைக் கைது செய்தனர்.

Similar News

News January 25, 2026

சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

சேலம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)

News January 25, 2026

ஆத்தூர்: திமுகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் அதிமுக

image

ஆத்தூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாதேஸ்வரன், இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன், கடந்த 2011 – 2016 காலகட்டத்தில் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ, திமுகவில் இணைந்தது சேலம் அதிமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

News January 25, 2026

சேலத்தில் மாணவி உயிரிழப்பு.. CM ஸ்டாலின் இரங்கல்

image

ஓசூரைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, சேலத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி விளையாடிக்கொண்டிருந்த போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். மாணவியின் மறைவு செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ள CMஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!