News January 21, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026’’ ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வருகிற ஜன.30ஆம் தேதி முதல் பிப். 1 வரையிலும் நடைபெற உள்ளது. எனவே நாகை மாவட்டத்தை சேர்ந்த 16 – 35 வயதுடைய விளையாட்டு வீரர்கள் <>www.sdat.tn.gov.in <<>>என்ற இணையம் வாயிலாக முன்பதிவு செய்ய ஜன. 21 கடைசி நாள் என ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News April 7, 2026

நாகை: திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியம்

image

நாகை மாவட்டம், நேற்று திருமருகல் தெற்கு ஒன்றியம், கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் சேர்ந்த பிரபு (எ)எஸ்.பிரபாகரன் நாகை சட்டமன்ற வேட்பாளர், தங்க.கதிரவன் முன்னிலையில், திமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

News April 7, 2026

நாகை ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

புதுவை மாநிலத்தில் வருகின்ற 9-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் இருந்து, 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றளவில் உள்ள நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும், வருகின்ற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூட வேண்டும் என்றும், தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

News April 7, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 06) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!