News January 21, 2026

திருச்சி: விபத்தில் கார் ஓட்டுநர் மூச்சுத் திணறி பலி

image

வளநாடு அடுத்த புதுக்குடியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் தனது மனைவியுடன் நேற்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சொரியம்பட்டி அருகே இ-பைக்கில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த கார் மோதி காயமடைந்தனர். இந்நிலையில் கார் ஓட்டுநர் கஸ்தூரிராஜ் என்ப்வருக்கு திடீரென அதிர்ச்சியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 14, 2026

திருச்சி: ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய:<> CLICK HERE. <<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

திருச்சி: என்.சி.சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

image

திருச்சியில் செயல்பட்டு வரும் என்.சி.சி அலுவலகத்தில், ஸ்டோர் அட்டெண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் ஏப்.8 ஆம் தேதிக்குள், “4 (டிஎன்) கேர்ல்ஸ் பி.என் என்.சி.சி, 14, ஆரோக்கியசாமி பிள்ளை தெரு, கிராப்பட்டி காலனி, திருச்சி -12” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2026

திருச்சி: பாரத் நெட் திட்டம் குறித்த அறிவிப்பு

image

பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்காக, தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tanfinet.tn.gov.in என்ற தளம் மூலம், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-24965595 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!