News January 21, 2026

ராணிப்பேட்டை: பெண்ணுக்கு எமனாய் வந்த வாகனம்!

image

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இளம்பெண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பெண் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த பெண் யார்? மோதிய வாகனம் யாருடையது? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 19, 2026

அரக்கோணத்தில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

அரக்கோணம், தணிகை போளூர் ரயில்வே கேட்டில் நேற்று (பிப்.18) தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி இறந்த கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில் இறந்தவர் அப்பகுதியை சேர்ந்த கீதா (70) என்பது தெரிய வந்தது.

News February 19, 2026

ராணிபேட்டையில் பிஞ்சு குழைந்தை துடித்துடித்து பலி!

image

ஆற்காட்டை சேர்ந்த தம்பதி பாபு- மேகலா. இவர்களது மகன் லட்சன் (3). மேகலா நேற்று (பிப்.18) தான் வேலை செய்து வந்த செய்யாறு கருப்பசாமி கோயிலுக்கு லட்சனை அழைத்து சென்றார். அப்போது கழிப்பிடம் சென்று விட்டு வந்து பார்த்தபோது லட்சன் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்தான். ஆற்காடு அரசு மருத்துவமனையில் அவன் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசர் விசாரித்து வருகின்றனர்.

News February 19, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (19.2.26) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!

error: Content is protected !!