News January 21, 2026

NASA உங்கள் பெயரை சந்திரனுக்கு அனுப்புகிறது

image

Artemis II பயணத்துக்காக ஒரு சிறப்பு திட்டத்தை NASA தொடங்கியுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களது பெயரை பதிவுசெய்யலாம். பதிவுசெய்த பெயர்கள் டிஜிட்டல் மெமரி கார்டில் சேமிக்கப்பட்டு, ஆர்டெமிஸ் II பயணத்தில் சந்திரனுக்கு அனுப்பப்படும். ஜனவரி 21-ம் தேதியே பதிவு செய்ய கடைசி நாள். பதிவு செய்த பின், NASA உங்களுக்கு ஒரு டிஜிட்டல் போர்டிங் பாஸ் தரும். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

Similar News

News February 18, 2026

தி.மலையில் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம் மாவட்டம் தேவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(62). கூலித் தொழிலாளியான இவர் கடந்த பிப்.13ஆம் தேதி வந்தவாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்த அவர், சேத்துப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 18, 2026

FLASH: உலகம் யூடியூப் சேவை முழுவதும் முடங்கியது!

image

இன்று காலை முதலே பலருக்கும் யூடியூப் வேலை செய்யவில்லை. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. யூடியூப் உள்ளே சென்று பார்த்தால், எந்த வீடியோவும் காட்டவில்லை. எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் இன்னும் வெளிவராத சூழலில், நெட்டிசன்கள் பலரும் புலம்பி வருகின்றனர். X தளத்திலும் #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

News February 18, 2026

திமுகவுக்கு ஷாக் கொடுத்த எஸ்.பி.வேலுமணி!

image

தேமுதிகவுக்கு, திமுக, அதிமுக என இரு கட்சிகளும் தூண்டில் வீசிய நிலையில் NDA கூட்டணியில் தேமுதிகவை எஸ்.பி.வேலுமணி உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் 2 நாள்கள் தங்கியிருந்த பிரேமலதாவிடம் விடாமல் பேசி கூட்டணி டீலிங்கை முடித்து திமுகவுக்கு ஷாக் கொடுத்துள்ளாராம். 8+1 சீட்டு, உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் இடங்கள் என உறுதி அளித்துள்ளதால் பிரேமலதா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!