News January 21, 2026
இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு

சுவீட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான வரவேற்பு நிகழ்ச்சிக்கு 7 இந்திய தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், விப்ரோ CEO ஸ்ரீனிவாஸ், இன்ஃபோசிஸ் CEO சலீல் பரேக், பஜாஜ் ஃபின்சர்வ் தலைவர் சஞ்சீவ், மஹிந்திரா CEO அனிஷ் ஷா மற்றும் ஜூபிலண்ட் தலைவர் பார்தியா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News January 27, 2026
மனைவிக்காக ப்ரோமோஷன் செய்யும் டிரம்ப்

தனது மனைவியும், US-ன் முதல் பெண்மணியுமான மெலனியா குறித்த ஆவணப்படத்தை காண டிக்கெட் எடுங்கள் என்ற டிரம்ப்பின் ட்விட் சர்ச்சையாகியுள்ளது. பனிப்புயல் ஒருபக்கம், குடியேற்ற அதிகாரிகளால் நடந்த கொலை மறுபக்கம் என அமெரிக்காவே முடங்கியுள்ளது. இதற்கிடையே மெலனியா ஆவணப்படம் வெள்ளை மாளிகையில் சிறப்பு திரையிடப்பட்டது அந்நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் ஜன.30-ம் தேதி ரிலீசாகிறது.
News January 27, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 593 ▶குறள்: ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். ▶பொருள்: ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
News January 27, 2026
தொப்பியின் விலை ₹4.2 கோடி!

ஆஸி. ஜாம்பவான் டான் பிராட்மேனின் தொப்பி ₹4.2 கோடிக்கு லாயிட்ஸ் கோல்ட் கோஸ்ட் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய தொப்பியை பிராட்மேன் பரிசாக அளித்தார் . ‘DG பிராட்மேன்’ & ‘SW சோஹோனி’ பெயர்கள் பொறிக்கப்பட்ட இத்தொப்பி, கடந்த 2024-ம் ஆண்டில் ஏலம்போன அவரது மற்றொரு தொப்பியை (₹2.63 கோடி) விட அதிக விலைக்கு சென்றுள்ளது.


