News January 21, 2026
தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியுள்ளார். மேலும் TN போராட்டக்களமாக மாறியுள்ளதாகவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கோ அரசு விரும்பவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். அரசு நிர்வாகத்தின் முதுகெழும்பாக உள்ள ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Similar News
News January 29, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $431.92 (இந்திய மதிப்பில் ₹39,754) உயர்ந்து $5,518.44-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $11.94 அதிகரித்து $118.1 ஆக உள்ளது. இதனால் இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகமாக உயர வாய்ப்புள்ளது.
News January 29, 2026
அஜித் பவார் இடத்தை பிடிக்கப் போவது யார்?

தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனவர் அஜித் பவார். எனினும் மீண்டும் சரத் பவாருடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் எழுந்தன. இந்நிலையில் எதிர்பாரா விதமாக அஜித் பவாரின் திடீர் மரணம் அக்கட்சியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவி ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை வலது பக்கம் Swipe செய்து பாருங்க..
News January 29, 2026
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இன்று(ஜன.29) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல்) கந்தூரி விழாவையொட்டி, நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள், முன்பருவத் தேர்வுகள் இருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்.7 (சனிக்கிழமை) வேலை நாளாகும்.


