News January 21, 2026

இந்தியாவுடன் ஒப்பந்தம்.. EU ஆணைய தலைவர் பெருமிதம்

image

<<18865933>>இந்தியா, ஐரோப்பிய யூனியன் <<>>இடையே FTA ஜன.27-ல் கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், இது 200 கோடி மக்களை கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் எனவும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் கூறியுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தமானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்குக்கு சமம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 30, 2026

ED ரெய்டு வந்தால் மோடியின் கை பிடிக்கும் திமுக: சீமான்

image

நாதக பாஜகவின் B டீம் என்ற விமர்சனத்துக்கு சீமான் பதிலளித்துள்ளார். கூட்டணிக்காக பல நூறு கோடிகள் பேரம் பேசியும் அதை உதறி தள்ளிய நான் B டீமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நான் B டீம் என்றால், எங்களது கட்சியில் 90% இந்துக்கள்தான் என பேசும் CM ஸ்டாலினுக்கு பெயர் என்ன எனவும் விமர்சித்துள்ளார். ED ரெய்டு வந்தால் மோடியின் கையை பிடிக்கும் திமுகவா பாஜகவை எதிர்க்கிறது எனவும் அவர் கேட்டுள்ளார்.

News January 30, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹4,800 குறைந்தது

image

தங்கம் விலை <<18989965>>நேற்று<<>> வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், இன்று (ஜன.30) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹600 குறைந்து ₹16,200-க்கும், சவரனுக்கு ₹4,800 குறைந்து ₹1,29,600-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.

News January 30, 2026

பிப்.1 அன்று ஏன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது?

image

இந்தியாவில் பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகும் இதுவே நடைமுறையில் இருந்தது. ஆனால், 2017-ல் அப்போதைய FM அருண் ஜெட்லி, பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். ஏப்ரலில் தொடங்கும் நிதியாண்டுக்கு தேவையான திட்டமிடல்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது.

error: Content is protected !!