News January 20, 2026
நாளை அதிமுகவில் இணைகிறாரா காளியம்மாள்?

கடந்தாண்டு நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் விஜய்யின் தவெகவில் இணைவார் என பேசப்பட்டது. இந்நிலையில், நாளை EPS முன்னிலையில் அவர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் தூத்துக்குடியில் போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது. கல்யாண சுந்தரத்தை தொடர்ந்து நாதகவின் மற்றொரு முகமான காளியம்மாள் அதிமுகவில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Similar News
News January 28, 2026
கல்கி 2: தீபிகாவுக்கு பதிலாக சாய் பல்லவியா?

கல்கி 2 படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க இயக்குநர் நாக் அஸ்வின் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபிகா படுகோன் கல்கி 2-ம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்த நிலையில், சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று அஸ்வின் நம்புவதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
News January 28, 2026
கொண்டாட்டத்திற்கு தயாராகும் தவெக

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார். வரும் பிப்.2-ம் தேதியுடன் தவெக தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் தலைமையில் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. மாவட்ட & மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த விழாவில் கூட்டணி, தேர்தல் அறிக்கை குறித்து விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 28, 2026
வழுக்கை விழாமல் தடுப்பது எப்படி?

➤ஒரு நாளுக்கு குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர் ➤வாரத்திற்கு 2 முறை வெந்தயத்தை ஊற வைத்து, பேஸ்ட் போல் அரைத்து தலை முடியில் தடவிய பின் குளிக்கவும் ➤அதிகம் கெமிக்கல் இல்லாத ஷாம்பூவை கொண்டு ஹேர் வாஷ் செய்யவும் ➤ஈரமாக இருக்கும் முடியை சீப்பை கொண்டு சீவுவதை நிறுத்தி கொள்ளுங்கள் ➤தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் ➤அதிகமாக Stress ஆகவேண்டாம். SHARE.


