News January 20, 2026
WPL-ல் பாதியிலேயே விலகிய தமிழக வீராங்கனை

நடப்பு WPL-ல் தொடரில் இருந்து காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை ஜி.கமலினி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்துவீச்சாளர் வைஷ்ணவி சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக MI நிர்வாகம் அறிவித்துள்ளது. கமலினியின் காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 & ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Similar News
News January 31, 2026
ஆசிரியர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி ஒரு மாதத்திற்கு மேல் இடைநிலை ஆசியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், ஊதிய முரண்பாட்டை சரி செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
சினிமாவில் இருந்து விலகுகிறேன்.. விஜய் அறிவிப்பு

தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்வை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான முடிவு அல்ல என்று விஜய் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜன நாயகனோடு சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தம் அளிப்பதாக திரைத்துறையினர் பலரும் கவலை தெரிவித்திருந்தனர். விஜய்யின் சினிமா பயணம் பற்றி உங்கள் கருத்து என்ன?
News January 31, 2026
5-வது T20: இந்திய அணி பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து சொதப்பிவரும் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அக்சர் படேல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 3-ல் வெற்றிபெற்று இந்திய அணி ஏற்கெனவே தொடரை கைப்பற்றியுள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்திலும் இந்தியா வெல்லுமா?


