News January 20, 2026
சென்னை: 24ஆம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜன-20) வரும் 24ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவித்து நாளை தீர்மானம் நிறைவேறிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும். பின் வரும் 22, 23 தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்க உள்ளன. 24ம் தேதி முதலமைச்சர் பதிலுரை வழங்க உள்ளார்.
Similar News
News February 2, 2026
சென்னை: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சென்னை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8610999482, 9500190590 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
சென்னை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News February 2, 2026
சொத்து வரி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சிக்கு நீண்டகாலமாக ரூ.33 கோடியே 68 லட்சம் சொத்துவரி நிலுவை வைத்திருக்கும், 100 பேர் அடங்கிய பட்டியலை,மாநகராட்சி நிர்வாகம் இணையதளத்தில் https://www.chennaicorporation.gov.in/gcc/ வெளியிட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் சொத்துவரி செலுத்தாத 5லட்சம் பேருக்கு நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. முதல் 30 நாட்களில் வரி செலுத்துவோருக்கு அதிகபட்சம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.


