News January 20, 2026
பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

தொடர்ந்து 2-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் சரிந்து 82,180 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 353 புள்ளிகள் சரிந்து 25,232.50 புள்ளிகளில் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
Similar News
News February 3, 2026
இனி தங்கம், வெள்ளி பதக்கங்கள் கிடைக்குமா?

விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம், வெள்ளியின் விலை தினமும் உயர்ந்து வருவதால், இனி விளையாட்டு, கல்வி நிறுவனங்களில் இந்த பதக்கங்கள் கொடுப்பது சிக்கலாகியுள்ளது. தங்கம், வெள்ளி பதக்கங்களுக்கு கூடுதல் செலவாகும் என்பதால், மாற்று உலகத்தை பயன்படுத்தலாமா என விளையாட்டுத்துறை நிர்வாகிகள், கல்வியாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதனால் பட்டமளிப்பு விழா, விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கத்தை பார்ப்பது கடினம்.
News February 3, 2026
விஜய்க்கு இதனால் பின்னடைவா?

பிப்ரவரி 2-வது வாரத்தில் விஜய், வேலூரில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், இந்நிகழ்ச்சி பிப்ரவரி இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அதேநேரம், நீண்ட நாள்களாக மக்கள் சந்திப்பு நடத்தாமல் இருப்பது, செய்தியாளர்களையே சந்திக்காமல் உள்ளது ஆகியவை விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News February 3, 2026
டிரம்பிடம் சரணடைந்த மோடி: காங்கிரஸ்

இந்தியா தொடர்பான அனைத்து முடிவுகளும் வாஷிங்டனிலேயே(டிரம்ப்) எடுக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர், வெனிசுலாவில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, இந்தியா – US வணிக விவகாரம் என எல்லா முடிவுகளின் அறிவிப்பையும் டிரம்ப் மட்டுமே வெளியிடுகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார். PM மோடி அவரிடம் முழுவதுமாக சரணடைந்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.


