News January 20, 2026

தேசிய கீதம் இசைப்பதில் என்ன பிரச்னை? வானதி

image

கவர்னர் விவகாரத்தில் திமுக அரசு ஆதிக்க மனப்பான்மையையோடு நடப்பதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தேசிய கீதம் இசைப்பதில் திமுகவுக்கு ஏன் பிடிவாதம் என கேட்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தேசிய கீதத்துக்கும் சம மரியாதை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டே முயற்சிகள் நடப்பதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News January 26, 2026

ஆஃபர்களை அள்ளி வீசும் BSNL

image

ஜியோ, ஏர்டெல் போன்ற நெட்வொர்க்குகளில் ₹400 வரை செலவிட வேண்டியிருக்கும் பிளானை ₹251-க்கு BSNL வழங்குகிறது. 30 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில், 100 GB டேட்டா, தினமும் 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். மேலும், BiTV சேவையையும் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஜன.31-ம் தேதியுடன் இந்த ஆஃபர் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே முந்துங்கள். SHARE IT.

News January 26, 2026

புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

நாளை மறுநாள் (ஜன.28) மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி, கரூர் வட்டத்திற்கும் அன்றைய தினம் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு ஜன.28-ல் பள்ளி, கல்லூரிகள் இயங்காது.

News January 26, 2026

குடியரசு தின கொண்டாட்டத்தில் இணைந்த கூகுள்

image

இந்திய நாட்டின் 77-வது குடியரசு தினத்தை ஒட்டி கூகுள், இஸ்ரோவின் சாதனைகளை கொண்ட சிறப்பு டூடுலை வெளியிட்டு குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இந்த டூடுலில், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் அறிவியல் மனப்பான்மை, தொழில்நுட்ப வலிமை, எதிர்கால லட்சியங்களை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

error: Content is protected !!