News January 20, 2026
ஒரு Wedding Card-ன் விலை ₹25 லட்சம்.. தந்தையின் பாசம்!

ஜெய்ப்பூர் தொழிலதிபர் மகள் திருமணத்திற்காக ₹25 லட்சத்தில் வெள்ளியில் இழைக்கப்பட்ட Box வடிவில் Wedding card-ஐ அடித்துள்ளார். 8×6.5 அங்குலம் கொண்ட கார்டில் 65 கடவுள் உருவங்கள் உள்ளன. கடவுள்களும் திருமணத்திற்கு வரவேண்டும் என்பதால், இப்படி அடித்துள்ளதாக கூறுகிறார். இந்த கார்டுகளை தனது மருமகள்களுக்கு மட்டும் வழங்கியுள்ளார். பாசத்திற்கு ஈடு இணையில்லை என்பார்களே, அது இதுதான் போல!
Similar News
News February 12, 2026
அஜித்குமார் மரண வழக்கு: மதுரை கோர்ட் புதிய ஆணை!

கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் DSP சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 போலீசார் வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராக மதுரை மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. CBI தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நகை காணாமல் போனதாக பொய் புகார் அளித்த நிகிதாவும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, தனது மகனை கொன்ற அனைவருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என அஜித்குமாரின் தாயார் வலியுறுத்தியிருந்தார்.
News February 12, 2026
2 வாரத்தில் வெள்ளி விலை தலைகீழாக குறைந்தது!

இந்த வாரம் தொடங்கியது முதலே வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ₹300 ஆகவே உள்ளது. வரும் நாள்களில் விலை ஏறுமா, குறையுமா என்ற குழப்பத்தில் மக்களும், நடுக்கத்தில் முதலீட்டாளர்களும் உள்ளனர். காரணம் கடந்த 29-ம் தேதி 1 கிராம் வெள்ளி ₹425-க்கு விற்பனையானது. ஆனால், 15 நாள்களில் விலை தலைகீழாக மாறி தற்போது ₹300 என்ற நிலையில் உள்ளது. இதுகுறித்த விசாரித்தபோது தற்போதைக்கு பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்கின்றனர்.
News February 12, 2026
BREAKING: தேமுதிக கூட்டணி.. பிரேமலதா புதிதாக அறிவித்தார்

தேமுதிக, இரு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டர்கள் விரும்பும் அணியில் தேமுதிக இடம் பெறும், அதுகுறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அமைச்சர் எ.வ.வேலு, EPS, நயினார் கூறியதை சுட்டிக் காட்டினார்.


